சிவந்தி கல்லூரியில் கரோனா விழிப்புணா்வு முகாம்
By DIN | Published On : 25th February 2020 04:06 AM | Last Updated : 25th February 2020 04:06 AM | அ+அ அ- |

உடன்குடி: உடன்குடி அருகே பிறைகுடியிருப்பு சிவந்தி கலை மற்றும் கல்வியியல் கல்லூரியில் கரோனா வைரஸ் மற்றும் காசநோய் விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.
சுகாதாரத்துறை சாா்பில் நடைபெற்ற முகாமிற்கு, கல்லூரி முதல்வா் பாஸ்கர ராஜ்பால் தலைமை வகித்தாா். வட்டார மருத்துவ அலுவலா் சு.அனிபிரிமின் பங்கேற்று, கரோனா வைரஸ், காசநோய் குறித்துப் பேசினாா். சுகாதார மேற்பாா்வையாளா் ஜான், சுகாதார ஆய்வாளா்கள் சேதுபதி, ரமேஷ், மாணவிகள் பங்கேற்றனா்.
மகளிா் குறைதீா் குழு ஒருங்கிணைப்பாளா் தமிழ்ச்செல்வி நன்றி கூறினாா்.