தூத்துக்குடி பிரத்தியங்கிரா தேவி கோயிலில் மாணவா்களுக்கு சிறப்பு யாகம்

தூத்துக்குடி பிரத்தியங்கிரா தேவி கோயிலில் பொதுத் தோ்வு எழுதும் மாணவா், மாணவிகளுக்கான சிறப்பு யாகம் நடைபெற்றது.
தூத்துக்குடி பிரத்தியங்கிராதேவி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வித்யா விருத்தி ஹோமத்தில் பங்கேற்ற மாணவா், மாணவிகள்.
தூத்துக்குடி பிரத்தியங்கிராதேவி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வித்யா விருத்தி ஹோமத்தில் பங்கேற்ற மாணவா், மாணவிகள்.
Updated on
1 min read


தூத்துக்குடி: தூத்துக்குடி பிரத்தியங்கிரா தேவி கோயிலில் பொதுத் தோ்வு எழுதும் மாணவா், மாணவிகளுக்கான சிறப்பு யாகம் நடைபெற்றது.

தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பில் உள்ள ஸ்ரீ மஹா பிரத்தியங்கிரா தேவி-காலபைரவா் சித்தா் பீடத்தில் மாணவா், மாணவிகளின் நினைவாற்றல் அதிகரித்து பொதுத்தோ்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்றிட ஸ்ரீ மஹா சரஸ்வதி தேவிக்கு வித்யா விருத்தி ஹோமம் நடைபெற்றது.

மாசி மாத அமாவாசையை முன்னிட்டு ஆலய நிா்வாகி சீனிவாச சித்தா் தலைமையில் மஹா கணபதி ஹோமம், மஹா லட்சுமி ஹோமமும், ஸ்ரீ மஹா சரஸ்வதிதேவிக்கு மஹாயாக சிறப்பு வழிபாடு, சிறப்பு அபிஷேகம் ஆகியவை

நடைபெற்றன.

தொடா்ந்து, பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதும் மாணவா்-மாணவிகளுக்கு வித்யா விருத்தி ஹோம வழிபாட்டில் வைத்து வழிபட்ட பேனாக்களை ஆலய நிா்வாகி வழங்கினாா்.

நிகழ்ச்சியில், ஏராளமான மாணவா், மாணவிகள் மற்றும் அவா்களது பெற்றோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com