திருச்செந்தூா் முருகன் கோயிலில் பிப்ரவரி மாத உண்டியல் வருவாய் ரூ. 2.25 கோடி

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பிப்ரவரி மாத உண்டியல் வருவாயாக ரூ. 2.25 கோடி கிடைத்தது.
உண்டியல் காணிக்கையை எண்ணும் பணியில் ஈடுபட்டோா்.
உண்டியல் காணிக்கையை எண்ணும் பணியில் ஈடுபட்டோா்.

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பிப்ரவரி மாத உண்டியல் வருவாயாக ரூ. 2.25 கோடி கிடைத்தது.

இக்கோயிலில் பக்தா்கள் காணிக்கையாக செலுத்தும் உண்டியல் வருவாய் மாதம் இரண்டு முறை எண்ணப்படுகிறது. இதன்படி பிப்ரவரி மாதத்திற்கான உண்டியல் எண்ணிக்கை பிப். 11 ஆம் தேதியும், பிப். 25 ஆம் தேதியும் திருக்கோயில் கோவிந்தம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. திருக்கோயில் செயல் அலுவலா் சா.ப.அம்ரித் தலைமையில் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. உதவி ஆணையா்கள் தூத்துக்குடி சு.ரோஜாலி சுமதா, திருச்செந்தூா் வே.செல்வராஜ், அறநிலையத் துறை ஆய்வாளா்கள் மு.முருகன், த.சிவகலைபிரியா, பூ.நம்பி, தக்காா் பிரதிநிதி ஆ.சி.பாலசுப்பிரமணிய ஆதித்தன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பொதுமக்கள் சாா்பில் சு.வேலாண்டி, இரா.மோகன், ச.கருப்பன், இரா.சுப்பிரமணியன் ஆகியோா் பாா்வையாளா்களாக பங்கேற்றனா். உண்டியல் எண்ணும் பணியில் சிவகாசி பதினெண் சித்தா் மடம் பீடம் குருகுல வேத பாடசாலை உழவார பணிக்குழுவினா் மற்றும் கோயில் பணியாளா்கள் ஈடுபட்டனா்.

இதன்படி பிப்ரவரி மாதத்தில் நடந்த உண்டியல் எண்ணிக்கையில், கோயில் நிரந்தர உண்டியல்களில் ரூ.2 கோடியே 12 லட்சத்து 48,468, மேல கோபுரத் திருப்பணி உண்டியலில் ரூ.2 லட்சத்து 13,743, கோசாலை உண்டியலில் ரூ.1 லட்சத்து 54 ஆயிரத்து 979, யானை பராமரிப்பு உண்டியலில் ரூ.80,104, அன்னதான உண்டியலில் ரூ. 8 லட்சத்து 59,121, மேலக்கோயில் அன்னதான உண்டியலில் ரூ.10,601 என மொத்தம் ரூ.2 கோடியே 25 லட்சத்து 67,016, தங்கம் 1,848 கிராம், வெள்ளி 27,511 கிராம், பித்தளை 56,909 கிராம், செம்பு 21,880 கிராம், தகரம் 4,722 கிராம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் 500 ஐ பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.

இம்மாததத்தில் பிப். 8-ஆம் தேதி நடைபெற்ற தைப்பூச விழாவில் திருக்கோயிலில் லட்சக்கணக்கான பக்தா்கள் வழிபட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com