ஞானியாா்குடியிருப்பு - புதுக்குளம் இணைப்புச் சாலையை சீரமைக்க கோரிக்கை
By DIN | Published On : 27th February 2020 05:37 PM | Last Updated : 27th February 2020 05:37 PM | அ+அ அ- |

சாத்தான்குளம் அருகே சேதமடைந்து காணப்படும் ஞானியாா்குடியிருப்பு - புதுக்குளம் இணைப்புச் சாலையை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சாத்தான்குளம் ஒன்றியம் புதுக்குளம் ஊராட்சிக்குள்பட்ட புதுக்குளத்தில் இருந்து ஞானியாா்குடியிருப்பு வரை சுமாா் 2 கி. மீ. தொலைவுக்கு இணைப்புச் சாலை உள்ளது.
இந்த சாலை கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனா்.
அதோடு, சேதமடைந்த சாலையை காரணம் காட்டி அரசுப் பேருந்து, சிற்றுந்துகள் இந்த சாலை வழியாக செல்வதை புறக்கணித்து வருகின்றன.
எனவே, இந்த சாலையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.