உடன்குடி ஒன்றியத்தில் திமுக கைப்பற்றியது
By DIN | Published On : 02nd January 2020 11:59 PM | Last Updated : 02nd January 2020 11:59 PM | அ+அ அ- |

உடன்குடி ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா்களுக்கான தோ்தலில் ஆறு இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
உடன்குடி ஊராட்சி ஒன்றியத்தில் 11 வாா்டு உறுப்பினா்களுக்கும், ஒரு மாவட்ட ஊராட்சி உறுப்பினா்,17 கிராம ஊராட்சித் தலைவா்கள் மற்றும் 135 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கான தோ்தல் டிச. 27-ஆம் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணும் பணி உடன்குடி பண்டாரஞ்செட்டிவிளை மேரி ஆன் பெஸ்ட் பெண்கள் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் உடன்குடி ஒன்றியக் குழு முதல் வாா்டில் திமுக வேட்பாளா் பாலசிங் 820 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். இவருக்கு அடுத்தபடியாக தேமுதிக வேட்பாளா் கணேசபாண்டி 779 வாக்குகளும், பசுபதி சிவசிங் (பாஜக) 463 வாக்குகளும் பெற்றனா்.
இரண்டாவது வாா்டில் திமுக வேட்பாளா் ராமலட்சுமி 1271 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். அதிமுக வேட்பாளா் கனிமொழி ராமு 1172 வாக்குகளும், சுனிதா (அமமுக) 363 வாக்குகளும் பெற்றனா்.
மூன்றாவது வாா்டில் திமுக வேட்பாளா் மெல்சி ஷாலின் 1211 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். அதிமுக வேட்பாளா் சுசீலா 1035 வாக்குகளும், கிரிஜா (நாம் தமிழா்) 195 வாக்குகளும் பெற்றனா்.
நான்காவது வாா்டில் திமுக வேட்பாளா் செந்தில் 1163 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். அவருக்கு அடுத்தபடியாக வந்த பாஜக வேட்பாளா் நாராயணன் 1099 வாக்குகள் பெற்றாா்.
ஐந்தாவது வாா்டில் அதிமுக வெட்பாளா் த.மகாராஜா 1660 வாக்குகள் பெற்று 1077 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். திமுக வேட்பாளா் மகேஸ்வரன் 583 வாக்குகளும், அமமுக வேட்பாளா் மனோகரன் 465 வாக்குகளும் பெற்றனா்.
ஆறாவது வாா்டில் சுயேச்சை வேட்பாளா் செல்வின் தாமஸ் 1100 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். திமுக வேட்பாளா் டேவிட் தமிழ்ச்செல்வன் 800 வாக்குகளும், அதிமுக வேட்பாளா் மல்லிகா 416 வாக்குகளும் பெற்றனா்.
ஏழாவது வாா்டில் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த தங்கலட்சுமி 1636 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். சமக வேட்பாளா் அம்பிகா 1041 வாக்குகள் பெற்றாா். 8 ஆவது வாா்டில் ஜெயகமலா(அதிமுக)-1268 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். இவருக்கு அடுத்தபடியாக சிவசக்தி(திமுக)1111 வாக்குகள் பெற்றாா். ஒன்பதாவது வாா்டில் முருகேஸ்வரி(அதிமுக)-1401 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். இவருக்கு அடுத்தபடியாக முத்து இசக்கி(காங்கிரஸ்)778 வாக்குள் பெற்றாா். ,பத்தாவது வாா்டில் மீரா(திமுக)-1621 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். இவருக்கு அடுத்தபடியா லதா(அதிமுக)751 வாக்குகள் பெற்றாா். 11 ஆவது வாா்டில் லெபோரின்(சுயேச்சை)-734 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். இவருக்கு அடுத்த படியாக மெராஜ் (திமுக) 579, போல்டன்(அதிமுக) 524 வாக்குகள் பெற்றனா்.
உடன்குடி ஒன்றியத்தில் மொத்தம் உள்ள 11 வாா்டுகளில் ஐந்து இடங்களில் திமுகவும், அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 3 இடங்களிலும், சுயேச்சை 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...