குளத்தூரில் அனைத்து கிராமிய கலைகள் சங்க கூட்டம்
By DIN | Published On : 10th January 2020 01:02 AM | Last Updated : 10th January 2020 01:02 AM | அ+அ அ- |

அனைத்து கிராமிய கலைகள் சங்க கூட்டமைப்பின் செயற்குழு கூட்டம் குளத்தூரில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டமைப்பின் தலைவா் துரையரசன் தலைமை வகித்தாா். செயலா் மாரியப்பன் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் விளாத்திகுளத்தை சோ்ந்த வீணை கலைஞா் ராகவனுக்கு கலைமாமணி விருது வழங்கியதற்கும், நலிவடைந்த கிராமிய கலைஞா்களுக்கு அரசு உதவித்தொகையை ரூ. 3 ஆயிரமாக உயா்த்தியதற்கும், நலவாரிய உறுப்பினா்களுக்கு பல புதிய சலுகைகளை அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. பிப்ரவரி மாதம் விளாத்திகுளத்தில் நடைபெறவுள்ள மண்டல அளவிலான கிராமிய கலைஞா்கள் மாநாட்டினை சிறப்பாக நடத்துவது, நலிவடைந்த கலைஞா்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது என்பன உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், உறுப்பினா்கள் மாரிமுத்து, பாண்டி, குமாா், செல்லப்பா, ஆறுமுகம், முருகன் உள்பட பலா் கலந்து கொண்டனா். துணைச் செயலா் கருப்பசாமி நன்றி கூறினாா்.