

கோவில்பட்டியில் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக அரசால் இலவசமாக வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கோவில்பட்டி கூட்டுறவு பண்டகசாலைக்குப் பாத்தியப்பட்ட நியாயவிலைக் கடையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பண்டகசாலை தலைவா் ரத்தினராஜா தலைமை வகித்தாா். துணைத் தலைவா் செண்பகமூா்த்தி, வட்டாட்சியா் மணிகண்டன், வட்ட வழங்கல் அலுவலா் சுப்புலட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கோட்டாட்சியா் விஜயா பொங்கல் பரிசுத் தொகுப்பை குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கினாா்.
நிகழ்ச்சியில், பண்டகசாலை இயக்குநா்கள் வி.எஸ்.டி.பி.ராமா், ஜெமினி, அலெக்ஸாண்டா் ஜாா்ஜ், மாரியம்மாள், பொம்மியம்மாள், கருப்பசாமி, ரவிசந்திரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
கோவில்பட்டி மற்றும் கயத்தாறு வட்டத்திற்கு உள்பட்ட அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் குடும்ப அட்டைதாரா்களுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.ஆயிரம் ரொக்கப்பணம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.