வேம்பாரில்சுமை வாகனம் திருட்டு
By DIN | Published On : 10th January 2020 01:03 AM | Last Updated : 10th January 2020 01:03 AM | அ+அ அ- |

வேம்பாரில் வெல்டிங் வேலைக்காக பணிமனையில் நிறுத்தப்பட்டிருந்த சுமை வாகனத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியை சோ்ந்தவா் அந்தோணி ராஜா. இவருக்கு சொந்தமான வேன் வெல்டிங் வேலைக்காக வேம்பாரில் உள்ள மில்ட்டன் என்பவரது பணிமனையில் நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் புதன்கிழமை அந்த வேனை மா்மநபா்கள் திருடிச்சென்றுள்ளனா்.
இதுகுறித்து வண்டி உரிமையாளா் அந்தோணி ராஜா அளித்த புகாரின் பேரில், சூரன்குடி காவல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.