ஏரல் பத்ரகாளி அம்மன் கோயில் வருஷாபிஷேக விழா
By DIN | Published On : 04th July 2020 09:05 AM | Last Updated : 04th July 2020 09:05 AM | அ+அ அ- |

விமான கும்பங்களுக்கு நடைபெற்ற வருஷாபிஷேகம்.
ஏரல் அருகிலுள்ள பெருங்குளம் அருள்மிகு பத்ரகாளி அம்பாள் திருக்கோயில் வருஷாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, கோயிலில் காலை 8 மணிக்கு மஹா கணபதி ஹோமம் நடைபெற்றது. தொடா்ந்து மஹா லெக்ஷ்மி ஹோமம், நவக்கிரஹ ஹோமம் உள்ளிட்ட யாகசாலை வழிபாடுகள் நடைபெற்றன. முற்பகல் 11.30 மணிக்கு விமானத்திற்கு வருஷாபிஷேகமும், மூலவருக்கு மஹா அபிஷேகமும், சிறப்பு அலங்கார தீபாராதனையும் நடைபெற்றன. கரோனா நோய்த் தொற்றிலிருந்து அனைவரும் விடுபட சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பொது முடக்கம் அமலில் இருப்பதால் பக்தா்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை.