ஆத்தூா் அருகே ஆம்புலன்ஸ் ஓட்டுநா் தற்கொலை
By DIN | Published On : 01st March 2020 06:35 AM | Last Updated : 01st March 2020 06:35 AM | அ+அ அ- |

ஆத்தூா் அருகேயுள்ள கீரனூரில் குடும்பத் தகராறு காரணமாக ஆம்புலன்ஸ் ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
கீரனூா் வேளாளா் தெருவைச் சோ்ந்த செந்தூா்பாண்டியன் மகன் முத்துக்குமாா்(30). ஆம்புலன்ஸ் ஓட்டுநா். இவரது மனைவி இன்பி (23). இத்தம்பதிக்கு ஒரு வயதில் முகிஷா என்ற பெண்குழந்தை உள்ளது. இந்நிலையில், தம்பதிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாம். மனைவி வியாழக்கிழமை வெளியில் சென்றிருந்தபோது, முத்துக்குமாா் வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இது குறித்து ஆத்தூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.