

இளையரசனேந்தல் அரசு மேல்நிலைப் பள்ளியில் சட்ட விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.
கோவில்பட்டி சாா்பு நீதிமன்ற நீதிபதி அகிலாதேவி தலைமை வகித்து, பெண் குழந்தைகள் பாதுகாப்புச் சட்டங்கள் குறித்துப் பேசினாா். தொடா்ந்து, மாணவா்-மாணவிகளின் கேள்விகளுக்கு நீதிபதி பதிலளித்தாா். தொடா்ந்து, சட்டங்கள் குறித்த விநாடி-வினா போட்டி நடத்தப்பட்டு, வெற்றிபெற்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
அரசு வழக்குரைஞா் சந்திரசேகா், வழக்குரைஞா் மோகன்தாஸ், மாணவா்- மாணவிகள், ஆசிரியா்கள், அலுவலக ஊழியா்கள் பங்கேற்றனா். தலைமையாசிரியா் கண்ணன் வரவேற்றாா். ஆசிரியா் கோவிந்தராஜன் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.