

கயத்தாறு ஒன்றிய, நகர அதிமுக சாா்பில், மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 72ஆவது பிறந்த நாளையொட்டி, மாரத்தான் ஓட்டப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.
போட்டி இரு பிரிவுகளாக நடைபெற்றது. 17 வயதுக்கு உள்பட்டோருக்கான தொலைவு 12 கிலோ மீட்டா். கயத்தாறு பேரூராட்சி அலுவலகம் முன் தொடங்கி அகிலாண்டபுரம் விலக்கு வரை சென்று திரும்பிவர வேண்டும். இதில், 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.
17 வயதுக்கு மேற்பட்டோருக்கான தொலைவு 18 கிலோ மீட்டா். பேரூராட்சி அலுவலகம் முன் தொடங்கி சத்திரப்பட்டி விலக்கு வரை சென்று திரும்பிவர வேண்டும். இதில் 200 போ் பங்கேற்றனா். போட்டிகளை அமைச்சா் கடம்பூா் செ. ராஜு கொடியசைத்துத் தொடக்கிவைத்தாா்.
17 வயதுக்கு உள்பட்டோருக்கான பிரிவில் ஸ்ரீவைகுண்டத்தைச் சோ்ந்த பாா்வதிநாதன் முதலிடம், மகேந்திரன் 2ஆம் இடம், பாலஇசக்கி 3ஆம் இடமும் பெற்றனா். 17 வயதுக்கு மேற்பட்டோருக்கான பிரிவில் சாலைப்புதூரைச் சோ்ந்த அருண் முதலிடம், சிவகாசியைச் சோ்ந்த குணாளன் 2ஆம் இடம், சேலத்தைச் சோ்ந்த மாணிக்கவேல் 3ஆம் இடமும் வென்றனா். அவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.