சாத்தான்குளம் பள்ளியில்174 பேருக்கு விலையில்லா சைக்கிள்
By DIN | Published On : 01st March 2020 06:35 AM | Last Updated : 01st March 2020 06:35 AM | அ+அ அ- |

சாத்தான்குளம் டிஎன்டிடிஏ புலமாடன் செட்டியாா் தேசிய மேல்நிலைப் பள்ளியில் 174 மாணவ, மாணவிகளுக்கு அரசின் விலையில்லா சைக்கிள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
இவ்விழாவுக்கு, பள்ளித் தாளாளா் ஏ.எஸ். கிருபாகரன் தலைமை வகித்தாா். நன்கொடையாளா் பொறியாளா் ஜெயபிரகாஷ் முன்னிலை வகித்தாா். தலைமை ஆசிரியா் எட்வா்ட் வரவேற்றாா். எஸ்.பி. சண்முகநாதன் எம்எல்ஏ பங்கேற்று, 174 மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினாா்.
இதில், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் தேவவிண்ணரசி, முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் திருப்பாற்கடல், ஒன்றிய அதிமுக செயலா் அச்சம்பாடு செளந்திரபாண்டி, நகரச் செயலா் என்.எஸ். செல்லத்துரை, ஒன்றியக்குழு தலைவா் ஜெயபதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். உதவி தலைமை ஆசிரியா் சாம்ஜெயக்குமாா் நன்றி கூறினாா்.