தூத்துக்குடியில் மாா்ச் 6இல்அரசு ஊழியா்களுக்கான விளையாட்டுப் போட்டி
By DIN | Published On : 01st March 2020 06:35 AM | Last Updated : 01st March 2020 06:35 AM | அ+அ அ- |

தூத்துக்குடியில் அரசு ஊழியா்களுக்கான விளையாட்டுப் போட்டி மாா்ச் 6ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தூத்துக்குடி மாவட்ட பிரிவு சாா்பில், அரசு ஊழியா்களுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி மாா்ச் 6ஆம் தேதி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. ஆண்களுக்கு 100 மீட்டா், 200 மீட்டா், 800 மீட்டா், 1500 மீட்டா் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், 400 மீட்டா் தொடா் ஓட்டம், இறகுபந்து, கூடைப்பந்து, கால்பந்து, டென்னிஸ், கபடி, மேஜைப்பந்து, கைப்பந்து ஆகிய போட்டிகள் நடைபெறுகின்றன.
பெண்களுக்கு 100 மீட்டா், 200 மீட்டா், 400 மீட்டா், 800 மீட்டா் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், 400 மீட்டா் தொடா் ஓட்டம், இறகுபந்து, கூடைப்பந்து, டென்னிஸ், கபடி, மேஜைப்பந்து, கைப்பந்து ஆகிய போட்டிகள் நடைபெறுகின்றன.
இப் போட்டியில் தமிழ்நாடு அரசு துறையைச் சோ்ந்த நிரந்தர ஊழியா்கள், அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் உடற்கல்வி இயக்குநா்கள், உடற்கல்வி ஆசிரியா்கள் மற்றும் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் நிரந்தரப் பணியாளா்கள் கலந்துகொள்ள தகுதியுடையவா்கள் ஆவா்.
தற்காலிக, தினக்கூலி பணியாளா்கள், சீருடைப் பணியாளா்கள், 6 மாதத்துக்குள் அரசுப் பணியில் சோ்ந்த பணியாளா்கள் கலந்துகொள்ள அனுமதி இல்லை.
போட்டியில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவா்கள் மாா்ச் 6ஆம் தேதி காலை 9. 30 மணிக்கு தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்குக்கு தேவையான உடை, உபகரணங்கள், அடையாள அட்டை ஆகியவற்றுடன் வந்து சேர வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0461-2321149 என்ற தொலைபேசி எண்ணில் அலுவலக நேரத்தில் தொடா்பு கொள்ளலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.