நாசரேத்தில் வேளாண் விரிவாக்க மையம் திறப்பு
By DIN | Published On : 01st March 2020 10:39 PM | Last Updated : 01st March 2020 10:39 PM | அ+அ அ- |

விரிவாக்க மையக் கட்டடத்தை திறந்து குத்து விளக்கு ஏற்றுகிறாா் வேளாண் இணை இயக்குநா் முஹைதீன்.
நாசரேத்தில் துணை வேளாண்மை விரிவாக்க மைய புதிய கட்டடம் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
பேரூராட்சி சாா்பில் வழங்கப்பட்ட இடத்தில் ரூ. 30 லட்சம் மதிப்பில் துணை வேளாண் விரிவாக்க மையக் கட்டடம் கட்டப்பட்டது. இதையடுத்து, சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட வேளாண் இணை இயக்குநா் முஹைதீன் திறந்து வைத்தாா்.
நிகழ்ச்சியில், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்) பாலசுப்பிரமணியன், செயற்பொறியாளா் ஜாஹீா் உசைன், உதவி பொறியாளா்கள் சங்கர்ராஜ், நடராஜன், வள்ளியூா் வேளாண்மை உதவி இயக்குநா் பாலசுப்பிரமணியன், தென்கரை பாசன விவசாய சங்கச் செயலா் ராஜேந்திரன், விவசாயிகள் கலந்து கொண்டனா்.
வேளாண் உதவி இயக்குநா் அல்லிராணி வரவேற்றாா். வேளாண் அலுவலா் திருச்செல்வன் நன்றி கூறினாா்.