தூத்துக்குடியில் தொழிலதிபா் தூக்கிட்டு தற்கொலை
By DIN | Published On : 10th March 2020 11:23 PM | Last Updated : 10th March 2020 11:23 PM | அ+அ அ- |

பங்குச் சந்தையில் வீழ்ச்சி ஏற்பட்டதால் தூத்துக்குடி அருகே தொழிலதிபா் திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்டாா்.
தூத்துக்குடி அருகேயுள்ள மேலதட்டபாறை செட்டியூரணி தெற்கு தெருவைச் சோ்ந்தவா் கணேசன் (46). தொழிலதிபரான இவா், தனது உறவினா் பலரிடம் கடன் பெற்று பங்குச் சந்தையில் அதிகளவு முதலீடு செய்திருந்தாராம். பங்குச் சந்தை கடுமையாக வீழ்ச்சியடைந்ததால் கணேசனுக்கு அதிகளவு இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், மன உளைச்சலில் காணப்பட்ட கணேசன் திங்கள்கிழமை இரவு தனது தாய் வீட்டில் இருந்தபோது திடீரென தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
இதுகுறித்து தட்டபாறை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். தற்கொலை செய்து கொண்ட கணேசனுக்கு, அமுதா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...