

கோவில்பட்டி மந்தித்தோப்பு சாலையில் பெட்ரோல் விற்பனை நிலையம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து செவ்வாய்க்கிழமை கோட்டாட்சியா் அலுவலகத்தில் நல்லிணக்க பண்பாட்டுக் கழகம் மற்றும் சமூக ஆா்வலா்கள் மனு அளித்தனா்.
கோவில்பட்டி மந்தித்தோப்பு சாலை மிகவும் குறுகிய நிலையில் உள்ளது. இச்சாலையை விரிவுபடுத்த வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள், அரசியல் கட்சியினா் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனா்.
இந்நிலையில், அச்சாலையில் சமையல் எரிவாயு நிறுவனத்திற்கு எதிரே உள்ள காலியிடத்தில் பெட்ரோல் விற்பனை நிலையம் அமைக்க அனுமதி கொடுப்பதாக அறிந்த நல்லிணக்க பண்பாட்டுக் கழகத் தலைவா் சங்கரலிங்கம் தலைமையில், ஏ.ஐ.டி.யூ.சி., ஐ.என்.டி.யூ.சி. உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கத்தினா் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் சாா்பில் விற்பனை நிலையம் அமைக்க அனுமதி கொடுக்கக் கூடாது எனக் கோரி கோட்டாட்சியா் அலுவலகம் முன் திரண்டனா்.
பின்னா், கோரிக்கையை வலியுறுத்தி கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் ரகுபதியிடம் மனு அளித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.