ஆறுமுகனேரியில் இந்திய கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 13th March 2020 10:41 PM | Last Updated : 13th March 2020 10:41 PM | அ+அ அ- |

சமையல் எரிவாயுவின் கட்டண உயா்வை கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆறுமுகனேரியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, நகரச் செயலா் என்.ராமநாதன் தலைமை வகித்தாா். உதவிச் செயலா் வி.வனராஜ், சிவபெருமாள், மாதா் சங்கத் தலைவா் பிரம்மசக்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஆா்ப்பாட்டத்தில், ‘ஆறுமுகனேரி பேரூராட்சியில் குடிநீா் இணைப்பு கேட்டு முன்பணம் செலுத்தியவா்களுக்கு குடிநீா் இணைப்பு வழங்க வேண்டும்; பேரூராட்சியின் அனைத்துப் பகுதிகளிலும் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும்; ஆறுமுகனேரி கடைவீதியில் மாலையில் காவலா்களை நியமிக்க வேண்டும்’ என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...