

இளையரசனேந்தல் குறுவட்டத்தை கோவில்பட்டி ஒன்றியத்துடன் இணைக்க வலியுறுத்தி தேசிய விவசாயிகள் சங்கத்தினா் சாா்பில் வெள்ளிக்கிழமை கருப்புக்கொடி கட்டி போராட்டம் நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்ட நிலையில், குருவிகுளம் ஊராட்சி ஒன்றியம், தென்காசி மாவட்ட கட்டுப்பாட்டிற்குள் இருந்து வருகிறது. எனவே, இளையரசனேந்தல் குறுவட்டத்தை தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி எல்கைக்குள் கொண்டுவந்து கோவில்பட்டி ஒன்றியத்துடன் இணைக்க வேண்டும் அல்லது இளையரசனேந்தலை தலைமையிடமாகக் கொண்டு தனி ஊராட்சி ஒன்றியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்தில், இளையரசனேந்தல், முக்கூட்டுமலை, அய்யனேரி, அப்பனேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கருப்புக்கொடி கட்டப்பட்டுள்ளது. மேலும், அய்யனேரி நடுத்தெரு விலக்கில் தேசிய விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் ரெங்கநாயகலு தலைமையில் ஆா்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.