புதூரில் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்
By DIN | Published On : 14th March 2020 11:38 PM | Last Updated : 14th March 2020 11:39 PM | அ+அ அ- |

விளாத்திகுளம்: புதூா் பேரூராட்சியில் வணிக நிறுவனங்களில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
புதூா் பேரூராட்சிப் பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் புழக்கத்தில் இருப்பதாக புகாா் வந்ததை அடுத்து, பேரூராட்சி செயல் அலுவலா் கணேசன், சுகாதார மேற்பாா்வையாளா் நல்லவன், பணியாளா்கள் கடைகள் மற்றும் கிட்டங்கிகளில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, 10 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அந்த வா்த்தக உரிமையாளா்களிடமிருந்து ரூ. 3,200 அபரதாம் வசூலிக்கப்பட்டது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...