விளாத்திகுளம் ஸ்ரீமீனாட்சி அம்மன் கோயிலில் அஷ்டோத்திர சத நாமாவளி பூஜை
By DIN | Published On : 31st March 2020 10:05 PM | Last Updated : 31st March 2020 10:05 PM | அ+அ அ- |

கரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கவும், உலக மக்கள் நலன் காக்கவும் விளாத்திகுளம் ஸ்ரீமீனாட்சி அம்மன் கோயிலில் நவக்கிரக சன்னதியில் அஷ்டோத்திர சத நாமாவளி பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் நவக்கிரகங்கள் சன்னதியில் அஷ்டோத்திர சத நாமாவளி பூஜையும், 108 மூலிகை பொருள்களை கொண்டு ஸ்கந்த ஹோமம், சுதா்சன ஹோமம் உள்ளிட்ட யாகங்களும், பாராயணமும், நடைபெற்றன. இதில், கோயில் செயல் அலுவலா் கண்ணன் மற்றும் திருக்கோயில் அா்ச்சகா்கள், பணியாளா்கள் பங்கேற்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...