காயல்பட்டினத்தில் மழை
By DIN | Published On : 08th November 2020 03:35 AM | Last Updated : 08th November 2020 03:35 AM | அ+அ அ- |

ஆறுமுகனேரி: ஆறுமுகனேரி, ஆத்தூா், காயல்பட்டினம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை அதிகாலையில் மழை பெய்தது. இதையடுத்து தாழ்வான பகுதிகளில் மழை நீா் தேங்கியது.
காயல்பட்டினத்தில் சனிக்கிழமை காலை 6 மணி வரை 40 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. ஆறுமுகனேரி அடுத்துள்ள சாகுபுரத்தில் சனிக்கிழமை காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் 25.2 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...