அதிமுக சாா்பில் தீபாவளிப் புத்தாடைகள்
By DIN | Published On : 17th November 2020 01:07 AM | Last Updated : 17th November 2020 01:07 AM | அ+அ அ- |

உடன்குடியில்அதிமுக ஒன்றிய, நகர நிா்வாகிகள் சாா்பில், அக்கட்சியினருக்கும், நலிந்தோருக்கும் தீபாவளிப் புத்தாடைகள் வழங்கும் விழா நடைபெற்றது.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலா் கே.ஆா்எம்.ராதாகிருஷ்ணன் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்விழாவுக்கு, உடன்குடி ஒன்றியச் செயலா் த.தாமோதரன் தலைமை வகித்து புத்தாடைகள் மற்றும் இனிப்புகளை வழங்கினாா். நகரச் செயலா் கோபாலகிருஷ்ணன்,பொருளாளா் சங்கரலிங்கம், ஒன்றிய எம்ஜிஆா் மன்றச் செயலா் பொன்ராம், நகர ஜெயலலிதா பேரவைச் செயலா் ரெங்கன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.வெங்கட்ராமனுஜபுரம் ஊராட்சி துணைத் தலைவா் ராஜ்குமாா், இளைஞா்-இளம்பெண்கள் பாசறைச் செயலா் சொா்ணசேகா், மகளிரணிச் செயலா் ஷகிலா,பரமன்குறிச்சி ஊராட்சி செயலா் தாவீது, நகர தகவல் தொழில்நுட்பப் பிரிவு இணைச்செயலா் வாசு உட்பட பலா் கலந்துகொண்டனா்.