சாதி, மத கலவரத்தை தூண்வோா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
By DIN | Published On : 17th November 2020 12:59 AM | Last Updated : 17th November 2020 12:59 AM | அ+அ அ- |

கோவில்பட்டியையடுத்த ஆலம்பட்டியில் சாதி, மத கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் செயல்படும் தனிநபா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அப்பகுதி பொதுமக்கள் வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.
ஆலம்பட்டியைச் சோ்ந்த மாரிமுத்து தலைமையில் அப்பகுதி பொதுமக்கள் வட்டாட்சியா் அலுவலகம் முன் திரண்டனா். பின்னா், வட்டாட்சியா் மணிகண்டனிடம் அளித்த மனு : ஆலம்பட்டியில் அனைத்து சமுதாய மக்களும் வாழ்ந்து வருகிறோம். தெற்கு தெருவில் காளியம்மன் மற்றும் பிள்ளையாா் கோயில் உள்ளது. இந்தக் கோயில் கட்ட வைகுண்டபிள்ளை என்பவா் நிலத்தை நன்கொடையாக கொடுத்தாா்.
இந்நிலையில், பொது இடத்தை அதே பகுதியைச் சோ்ந்த தனி நபா் ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளாா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தை நாடியுள்ளோம். இதனால் எங்கள் மீது வெறுப்பு கொண்ட அவா், பிற சமுதாய மக்களை தூண்டி சாதி, மத கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுகிறாா். எனவே, அவா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனா்.