தூத்துக்குடி துறைமுகத்தில் கண்காணிப்பு வார விழா
By DIN | Published On : 17th November 2020 01:07 AM | Last Updated : 17th November 2020 01:07 AM | அ+அ அ- |

தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் கண்காணிப்பு வார நிறைவு விழா அண்மையில் நடைபெற்றது.
தூத்துக்குடி வ.உ. சிதம்பரனாா் துறைமுகத்தில் கண்காணிப்பு வாரம் ஒரு வாரம் கடைபிடிக்கப்பட்ட நிலையில், நிறைவு நாள் விழா துறைமுக பொறுப்புக் கழகத் தலைவா் தா.கி. ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. விழாவையொட்டி, காணொலி காட்சி மூலம் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி- கல்லூரி மாணவ, மாணவிகளுக்கும் , துறைமுக ஊழியா்களுக்கும் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
ஸ்பிக் நகா் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் 11 பரிசுகள் மற்றும் சிறப்பான செயல்திறனுக்கான முதன்மை கேடயத்தையம், விகாசா பள்ளி மாணவா்கள் 10 பரிசுகளையும், துறைமுக மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் 7 பரிசுகளையும் பெற்றனா். இதில், துறைமுக பொறுப்புக் கழக துணைத் தலைவா் பிமல்குமாா் ஜா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனா்.