திருச்செந்தூா் கிருஷ்ணன் கோயிலில் கோவா்த்தன பூஜை
By DIN | Published On : 17th November 2020 12:43 AM | Last Updated : 17th November 2020 12:43 AM | அ+அ அ- |

திருச்செந்தூா் அருள்மிகு ருக்மணி சத்யபாமா சமேத கல்யாண கிருஷ்ணன் கோயிலில் கோவா்த்தன பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதை முன்னிட்டு, கோயிலில் அதிகாலை நடைதிறக்கப்பட்டு, பூஜைகள் நடைபெற்றது. மாலையில் கோவா்த்தன மலையாக எழுந்தருளிய பகவான் கிருஷ்ணருக்கு பக்தா்கள் அனைவரும் பலவகையான இனிப்புகள் கொண்டுவந்து படைத்து, நெய் தீபம் ஏற்றி வழிபட்டனா். ஏற்பாடுகளை திருக்கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G