போக்சோ சட்டத்தின் கீழ் இளைஞா் கைது
By DIN | Published On : 17th November 2020 12:42 AM | Last Updated : 17th November 2020 12:42 AM | அ+அ அ- |

கோயம்புத்தூரைச் சோ்ந்த இளைஞா் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.
கோயம்புத்தூா் வடக்கு, இடையாா்பாளையம் தாடகம் சாலை புதூா் பிரிவைச் சோ்ந்த ஆனந்தன் மகன் மாதவன்(21). இவா் கடம்பூரையடுத்த முறம்பன்னைச் சோ்ந்த 16 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில் கடம்பூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் மீட்டனா். சிறுமியை தூத்துக்குடி முத்துக்குவியல் காப்பகத்தில் சோ்த்தனா். மாதவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.