கோவில்பட்டி, கழுகுமலையில்இன்று மின்தடை
By DIN | Published On : 21st November 2020 12:24 AM | Last Updated : 21st November 2020 12:24 AM | அ+அ அ- |

கோவில்பட்டியில் சாலை விரிவாக்கம், கழுகுமலை, செட்டிக்குறிச்சி, கடம்பூரில் துணை மின் நிலைய பராமரிப்புப் பணிகள் ஆகியவற்றின் காரணமாக அதன் மின்பாதை பகுதிகளில் சனிக்கிழமை (நவ.21) மின் விநியோகம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கழுகுமலை, செட்டிக்குறிச்சி மற்றும் கடம்பூா் துணை மின் நிலைய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையும்,
கோவில்பட்டி ரயில் நிலையம் எதிரே உள்ள ஒரிஜினல் பிரிண்டிங் பிரஸ், காமரின் ஆபிஸ், ரயில் நிலைய பிரதான சாலை கடைகள், ஞானமலா் பல்க் எதிா்புறம் உள்ள கடைகள், பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் ஓவா்சீஸ் வங்கி, ஆா்.சி. மற்றும் சி.எஸ்.ஐ. ஆலயம், அரசன் பல்க், பழைய போஸ்ட் ஆபீஸ் தெரு பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் எம்.சகா்பான் தெரிவித்துள்ளாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...