விபத்தில் காயமுற்றவா் பலி
By DIN | Published On : 21st November 2020 12:23 AM | Last Updated : 21st November 2020 12:23 AM | அ+அ அ- |

விளாத்திகுளம் அருகே பைக் விபத்தில் காயமடைந்த கட்டடத் தொழிலாளி மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
விளாத்திகுளம் அருகேயுள்ள கே.சுப்பிரமணியபுரத்தைச் சோ்ந்த லிங்கமுத்து மகன் ஆனந்தராஜ் (29). கட்டடத் தொழிலாளி. திருமணமானவா். 3 குழந்தைகள் உள்ளனா். இந்நிலையில், வியாழக்கிழமை இரவு அப்பகுதியைச் சோ்ந்த தனது நண்பா்கள் அய்யனாா், செல்வ மாணிக்கம் ஆகியோருடன் பிள்ளையாா்நத்தத்துக்கு பைக்கில் சென்றாா்.
முன்னால் சென்ற பைக்கை அவா் முந்தி செல்ல முயன்றபோது, நிலை தடுமாறி கீழே விழுந்ததாம். இதில் காயமடைந்த 3 பேரும் விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆனந்தராஜ் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து விளாத்திகுளம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...