தூத்துக்குடி மாவட்டத்தில் திமுகவினா் மறியல்:எம்எல்ஏ உள்பட 392 போ் கைது
By DIN | Published On : 23rd November 2020 01:55 AM | Last Updated : 23rd November 2020 01:55 AM | அ+அ அ- |

திமுக இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து, தூத்துக்குடி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மறியலில் ஈடுபட்ட எம்எல்ஏ உள்பட 392 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே மாநில பொதுக்குழு உறுப்பினா் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலா் ஆனந்தசேகரன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 105 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவில்பட்டியில் சாலை மறியலில் ஈடுபட்ட நகரச் செயலா் கருணாநிதி, மேற்கு ஒன்றியச் செயலா் பீக்கிலிபட்டி வீ.முருகேசன் உள்ளிட்ட 71 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
சாத்தான்குளம் அருகே இடைச்சிவிளையில் அரசூா் ஊராட்சித் தலைவா் தினேேஷ் ராஜசிங் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 120 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திருச்செந்தூா் பேருந்து நிலையம் முன் தெற்கு மாவட்ட பொறுப்பாளா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமையில் மறியலில் ஈடுபட்ட ஒன்றியச் செயலா் செங்குழி ரமேஷ், நகர பொறுப்பாளா் வாள் சுடலை மற்றும் 3 பெண்கள் உள்ளிட்ட 96 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
உடன்குடியில் ஒன்றியச் செயலா் டி.பி.பாலசிங் தலைமையில் மறியலில் ஈடுபட்ட நகரச் செயலா் ஜான்பாஸ்கா் உள்ளிட்டோரை போலீஸாா் கைது செய்தனா்.