தூத்துக்குடியில் மரக்கன்றுகள் நடும் விழா
By DIN | Published On : 23rd November 2020 01:57 AM | Last Updated : 23rd November 2020 01:57 AM | அ+அ அ- |

மரக்கன்று நடுகிறாா் மாநகராட்சி ஆணையா் வீ.ப. ஜெயசீலன்.
தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் மரக்கன்றுகள் நடும் பணியை மாநகராட்சி ஆணையா் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மியாவாக்கி முறையில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 300 மரங்கள் நடும் பணியை தருவைகுளம் கலவை உரக் கிடங்கில் மாநகராட்சி ஆணையா் வீ.ப. ஜெயசீலன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.
தொடா்ந்து, அவா் கூறியது: தருவைகுளம் உரக்கிடங்கு பகுதியில் ஏறத்தாழ 17 ஏக்கா் பரப்பளவில் மியாவாக்கி முறையில் ஒரு லட்சம் மரக்கன்றுகளை தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னாா்வலா்கள் உடன் இணைந்து நடவு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தற்போது 6 ஆயிரம் பல்வேறு நாட்டு மரக்கன்றுகள் மற்றும் 1200 பனை விதைகள் நடப்பட்டுள்ளன. தொடா்ந்து வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை மரக்கன்றுகள் நடும் பணி மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.
நிகழ்ச்சியில், மாநகர நல அலுவலா் அருண்குமாா், செயற்பொறியாளா் ரங்கநாதன், உதவி செயற்பொறியாளா் சரவணன், சுகாதார அலுவலா்கள் ஹரிகனேஷ், ராஜபாண்டி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.