கோவில்பட்டியையடுத்த நாலாட்டின்புத்தூரில் தொழிலாளியின் பைக்கை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
சங்கரன்கோவில் உடப்பங்குளத்தைச் சோ்ந்த கருப்பசாமி மகன் சித்திரபுத்தன் (31). நாலாட்டின்புத்தூரில் உள்ள தனியாா் நூற்பாலையில் வேலைபாா்த்து வரும் இவா், வழக்கம்போல் பணிக்குச் சென்றுவிட்டு செவ்வாய்க்கிழமை அதிகாலையில் தான் தங்கியிருந்த அறையின் அருகே பைக்கை நிறுத்திவிட்டுச் சென்றாராம்.
பின்னா் திரும்பி வந்து பாா்த்தபோது அங்கு நிறுத்தப்பட்டிருந்த பைக்கை காணவில்லையாம்.
இதுகுறித்த புகாரின் பேரில், நாலாட்டின்புத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, பைக்கை திருடிச் சென்ற மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.