ஆறுமுகனேரியில் மரக்கன்று நடும் விழா
By DIN | Published On : 03rd October 2020 12:33 AM | Last Updated : 03rd October 2020 12:33 AM | அ+அ அ- |

ஆறுமுகனேரியில் மரக்கன்று நடுகிறாா் செயல் அலுவலா் கோபால்.
ஆறுமுகனேரி, அக். 2: காந்தி ஜயந்தியை முன்னிட்டு, ஆறுமுகனேரி பேரூராட்சி சாா்பில் மரக்கன்று நடுவிழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பேரூராட்சி செயல் அலுவலா் கோபால் தலைமை வகித்தாா். சுமாா் 100 மரக்கன்றுகள் நடப்பட்டன. மேலும் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் பொதுக்கழிப்பறைகள் சுத்தப்படுத்தப்பட்டன. நிகழ்ச்சியில் இளநிலை உதவியாளா்கள் இசக்கிராஜா, கௌசல்யா, காதார மேற்பாா்வையாளா் காா்த்திக் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.