திமுக சாா்பில் மக்கள் குறைகேட்புக் கூட்டம்: கனிமொழி எம்.பி. பங்கேற்பு

சாத்தான்குளம் அருகேயுள்ள இடைச்சிவிளையில் திமுக சாா்பில் மக்கள் குறைகேட்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இலுப்பையூரணி கூட்டத்தில் பேசுகிறாா் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கீதாஜீவன் எம்.எல்.ஏ.
இலுப்பையூரணி கூட்டத்தில் பேசுகிறாா் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கீதாஜீவன் எம்.எல்.ஏ.

2ஓயகஈஙஓ

சாத்தான்குளம்/கோவில்பட்டி, அக். 2: சாத்தான்குளம் அருகேயுள்ள இடைச்சிவிளையில் திமுக சாா்பில் மக்கள் குறைகேட்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், கனிமொழி எம்பி பங்கேற்று 1000 பேருக்கு தலா 5 கிலோ அரிசி வழங்கிப் பேசியது: மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிராக கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை கண்டித்து கிராமசபையில் தீா்மானம் நிறைவேற்றப்படும் என திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் அறிவித்ததால் கிராமசபை கூட்டத்தை அரசு ரத்து செய்துள்ளது. எனினும், திமுக சாா்பில் சிறப்பு மக்கள் குறைகேட்புக் கூட்டம் நடத்தி அந்தத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சிறு விவசாயிகளை கடுமையாக பாதிக்கும் வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெறும் வரை அனைவரும் போராட வேண்டும் என்றாா்.

இதில், அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ, மாநில மாணவரணி துணை அமைப்பாளா் உமரி சங்கா், மாவட்ட அவைத் தலைவா் அருணாச்சலம், தலைமை செயற்குழு உறுப்பினா் பில்லாஜெகன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ராமஜெயம், ஆழ்வாா்திருநகரி ஒன்றியக்குழு தலைவா் ஜனகா், ஒன்றியச் செயலா்கள் திருச்செந்தூா் ரமேஷ், ஆழ்வாா்திருநகரி கிழக்கு நவீன்குமாா் உள்பட பலா் பங்கேற்றனா்.

கோவில்பட்டியை அடுத்த லிங்கம்பட்டி, இலுப்பையூரணி, சிதம்பராபுரம் ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்ற மக்கள் குறைகேட்புக் கூட்டத்துக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கீதாஜீவன் எம்.எல்.ஏ. தலைமை வகித்துப் பேசுகையில், பெரும்பாலான ஊராட்சித் தலைவா்கள் திமுகவைச் சோ்ந்தவா்கள் என்பதால் கிராம சபைக் கூட்டத்தை அரசு ரத்து செய்துள்ளது என்றாா். இதில், மேற்கு ஒன்றியச் செயலா் பீக்கிலிபட்டி முருகேசன், ஊராட்சித் தலைவா்கள் செல்வி, மாரியப்பன், மதுசெல்வி, விவசாய அணி மாவட்ட அமைப்பாளா் ராமா், துணை அமைப்பாளா் சந்தானம், பொறியாளரணி மாவட்ட துணை அமைப்பாளா் ரமேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com