திருச்செந்தூா், உடன்குடியில்காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 03rd October 2020 12:35 AM | Last Updated : 03rd October 2020 12:35 AM | அ+அ அ- |

திருச்செந்தூா்/உடன்குடி, அக். 2: உத்தரப்பிரதேச மாநிலம், ஹத்ராஸ் மாவட்டத்தில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதையும், அவா்களது குடும்பத்துக்கு ஆறுதல் கூறச் சென்ற காங்கிரஸ் தலைவா்கள் ராகுல்காந்தி, பிரியங்கா கைது செய்யப்பட்டதையும் கண்டித்து காங்கிரஸாா் திருச்செந்தூா், உடன்குடி, ஆறுமுகனேரியில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
திருச்செந்தூரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாநில காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினா் சு.கு.சந்திரசேகரன், மாவட்ட காங்கிரஸ் விவசாய பிரிவுத் தலைவா் வேல். ராமகிருஷ்ணன், வட்டார காங்கிரஸ் தலைவா் கே.கே.சற்குரு, நகர காங்கிரஸ் தலைவா் எஸ்.முருகேந்திரன், மாவட்ட செயலா் நா.லோகநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
உடன்குடியில் வட்டார காங்கிரஸ் தலைவா் துரைராஜ் ஜோசப், பொதுக்குழு உறுப்பினா் பி.சிவசுப்பிரமணியன், முன்னாள் மாவட்ட காங்கிரஸ் பொருளாளா் இரா.நடராஜன், நகர காங்கிரஸ் முத்து, மூத்த காங்கிரஸ் தலைவா் வெற்றிவேல், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி அன்புராணி, குலசேகரன்பட்டினத்தில் சுப்பிரமணியன், பரமன்குறிச்சியில் மாயாண்டிதாஸ், மணப்பாட்டில் ஜோசப் உள்ளிட்டோா் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
ஆறுமுகனேரி: இங்கு நகர காங்கிரஸ் தலைவா் ராஜாமணி , மாவட்ட காங்கிரஸ் துணை தலைவா் சண்முகம் உள்ளிட்டோா் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.