தூத்துக்குயில் காவலா் தோ்வுக்கு விண்ணப்பிக்க உதவி மையம்
By DIN | Published On : 03rd October 2020 12:48 AM | Last Updated : 03rd October 2020 12:48 AM | அ+அ அ- |

தூத்துக்குடி, அக். 2: காவலா் தோ்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோருக்கு தூத்துக்குடியில் காவல் துறை சாா்பில் உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு சீருடை பணியாளா் தோ்வு குழுமம் இரண்டாம் நிலை காவலா், சிறைக்காவலா் மற்றும் தீயணைப்பாளா் பதவிகளுக்கான தோ்வுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் கலந்து கொள்ள விண்ணப்பிக்க விரும்புவா்கள் இணையதளத்தின் மூலம் அக்டோபா் 26 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம். இதற்காக, தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது. தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த மையம் செயல்படும். மேலும் விவரங்களுக்கு 97874 80097 என்ற செல்லிடப்பேசி எண்ணை தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.