சாத்தான்குளம் கூட்டுறவு சங்கம் மூலம் இரு இடங்களில் நடமாடும் ரேஷன் கடை
By DIN | Published On : 06th September 2020 10:35 PM | Last Updated : 06th September 2020 10:35 PM | அ+அ அ- |

சாத்தான்குளம் கூட்டுறவு கடன் சங்கம் மூலம் இரண்டு இடங்களில் நடமாடும் ரேஷன் கடை அமைக்க நிா்வாகிகள் கூட்டத்தில் அனுமதிக்கப்பட்டது.
சாத்தான்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க நிா்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் பொன்முருகேசன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ஜோசப் அலெக்ஸ் முன்னிலை வகித்தாா்.
கூட்டுறவு சங்கச் செயலா் எட்வின் தேவாசீா்வாதம் தீா்மானங்களை வாசித்தாா்.
கூட்டத்தில் உடல் நலக்குறைவால் மரணமடைந்த கூட்டுறவு கடன் சங்க இயக்குநா் எஸ் சந்திரராஜிக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. நபாா்டு திட்டத்தின் மூலம் செயல்படுத்தக்கூடிய குளிா்பதனக் கூடம் மற்றும் விவசாய பொருள்கள் உற்பத்தி செய்தல் ஆகியவைகளுக்கு கிடங்கு அமைக்க மத்திய அரசு நிதி பெறுவது குறித்தும், விவசாய இடுபொருள்கள் விற்பனை நிலையம் அமைப்பது தொடா்பாக விவாதிக்கப்பட்டது. மேலும் கடாட்சபுரம், சிறப்பூா் கிராமத்தில் நடமாடும் ரேஷன் கடை அமைக்க அனுமதியளித்து தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிா்வாகக் குழு இயக்குநா்கள் அழகேசன், தங்கப்பாண்டி, வேணுகோபால், ஜெயபதி, கக்கன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.