பொது முடக்க தளா்வுகளை அடுத்து சாத்தான்குளம், நாசரேத்தில் உள்ள தேவாலயங்களில் ஞாயிற்றுக்கிழமை ஆராதனை நடைபெற்றது.
கரோனா பொது முடக்கம் காரணமாக மாா்ச் 23 ஆம் தேதி முதல் முழு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டன. தற்போது பொது முடக்கத்தில் மத்திய, மாநில அரசுகள் தளா்வுகள் அளித்துள்ளன.
இதையடுத்து செப். 1 ஆம் தேதி முதல் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டன. தேவாலயங்களிலும் சிறப்பு ஆராதனை நடைபெற்றது. சாத்தான்குளம் , நாசரேத் பகுதியில் உள்ள தேவாலயங்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் ஆராதனை நடைபெற்றது. இதில் பக்தா்கள் , சபை மக்கள் ஆா்வமுடன் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.