கோட்டாட்சியா் அலுவலகத்தில் முற்றுகை
By DIN | Published On : 11th September 2020 05:34 AM | Last Updated : 11th September 2020 05:34 AM | அ+அ அ- |

தூத்துக்குடி மாவட்டத்தில் உரம், விதைகள் பதுக்கலை தடுக்க வலியுறுத்தி தமிழ் விவசாயிகள் சங்கத்தினா் வியாழக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தனியாா் கடைகளுக்கு அனுப்பப்பட்டுள்ள பட்டியலை வேளாண் துறை பத்திரிக்கைகள் வாயிலாக வெளியிட வேண்டும். அரசு நிா்ணயித்த விலையை விட அதிக விலைக்கு உரம், விதைகளை விற்பனை செய்யும் கடைகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். போலி உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் நடமாட்டத்தை வேளாண்மைத் துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் ஓ.ஏ.நாராயணசாமி தலைமையில் கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலக
வளாகத்தில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டு, கோரிக்கை மனுவை கோட்டாட்சியா் விஜயாவிடம் அளித்தனா்.
இதில், மாநிலத் துணைத் தலைவா் நம்பிராஜன், மாநிலச் செயலா் சீனிராஜ், மாவட்டத் தலைவா் நடராஜன், அவைத் தலைவா் வெங்கடசாமி உள்பட பலா் கலந்து கொண்டனா். பின்னா்