கோவில்பட்டி பிரதான சாலை விரிவாக்கப் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தல்
By DIN | Published On : 11th September 2020 05:39 AM | Last Updated : 11th September 2020 05:39 AM | அ+அ அ- |

கோவில்பட்டி பிரதான சாலையில் நடைபெற்று வரும் சாலை விரிவாக்கப் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி தமிழக முதல்வருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவா் ஆா்.காமராஜ், தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு அனுப்பியுள்ள மனு: கோவில்பட்டி லட்சுமி மில் மேம்பாலம் முதல் ரயில்வே மேம்பாலம் வரை சுமாா் 2 கி.மீ. தொலைவில் ரூ. 7 கோடி மதிப்பீட்டில் சாலை விரிவாக்கப் பணி நடைபெற்று வருகிறது.
பிரதான சாலையில் இருபுறமும் கழிவுநீா் செல்வதற்கும், நடைபாதை அமைப்பதற்கும் பிரதான சாலையில் உள்ள நீா்வரத்து ஓடைக் கடைகளை அகற்றவும், பொதுமக்களின் நலன் கருதி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவுப்படி சாலையை விரிவாக்கம் செய்யவும், நீா்வழிப் போக்குவரத்தில் கட்டப்பட்டுள்ள ஆக்கிரமிப்புக் கடைகளை அப்புறப்படுத்தவும் ஆணையிடுமாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.