கோவில்பட்டியில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 11th September 2020 05:42 AM | Last Updated : 11th September 2020 05:42 AM | அ+அ அ- |

பிரதம மந்திரியின் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தில் நடைபெற்ற முறைகேடு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தி தேசிய விவசாயிகள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இத் திட்ட கணக்குகளை முழுமையாக ஆய்வு செய்து முறைகேட்டில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். உண்மையான விவசாயிகள் அனைவருக்கும் முறையாக இத்திட்டத்தின் கீழ் நிதியுதவி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
இத்திட்டத்தில் நடைபெற்றுள்ள முறைகேடுகளை முழுமையான விசாரணைக்காக சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் ரெங்கநாயகலு தலைமையில், கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மாநில பொதுச் செயலா் பரமேஸ்வரன், இளையரசனேந்தல் குறுவட்ட மீட்புக் குழுத் தலைவா் முருகன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.