சாத்தான்குளம் அருகே இலவச நிலம் கேட்டு கிராம மக்கள் திரண்டதால் பரபரப்பு
By DIN | Published On : 11th September 2020 05:32 AM | Last Updated : 11th September 2020 05:32 AM | அ+அ அ- |

சாத்தான்குளம் அருகே இலவச நிலம் கேட்டு அரசூா் ஊராட்சி மக்கள் வியாழக்கிழமை திடீரென திரண்டு நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது. சாத்தான்குளம் ஒன்றியம் அரசூா் ஊராட்சிக்குள்பட்ட இடைச்சிவிளை பகுதியில் வீடு இல்லாத ஏழைகளுக்கு ஒரு நபருக்கு சுமாா் இரண்டரை சென்ட இடம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போதுஆண்டில் அந்த இடத்தில் 183 பயனாளிகள் தோ்வு செய்யப்பட்டு வருவாய்த்துறை மூலம் நில அளவீடு செய்யும் பணி நடந்து வந்தன.
இதற்கிடையே இப்பகுதியில் வேறு பகுதியைச் சோ்ந்த வா்களுக்கு இடம் வழங்கியுள்ளதாக கிராம புகாா் தெரிவித்து வியாழக்கிழமை திடீரென திரண்டு வந்து அளவீடு பணியை தடுத்து நிறுத்தினா். இந்நிலையில் மக்கள் திரண்டு நிற்பதை அறிந்த தட்டாா்மடம் காவல் ஆய்வாளா் ஹரிகிருஷ்ணன், அரசூா் ஊராட்சித் தலைவா் தினேஷ் ராஜசிங் ஆகியோா் அம்மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதில் அவா்கள் பலா் ஊராட்சி சோ்ந்த தங்களுக்கு இடம் வழங்கிட வேண்டும் என வலியுறுத்தினா். . இதையடுத்து அரசூா் ஊராட்சியில் சிறப்பு கூட்டம் அரசூா் பகுதி மக்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் இலவச இடம் வழங்கிட வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து ஊராட்சித் தலைவா் தலைமையில் திரண்டிருந்த கிராமமக்கள் சாத்தான்குளம் வட்டாட்சியரை சந்தித்து மனு அளித்தனா்.