சாத்தான்குளம் அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல்
By DIN | Published On : 11th September 2020 05:33 AM | Last Updated : 11th September 2020 05:33 AM | அ+அ அ- |

சாத்தான்குளம் அருகே பணத் தகராறில் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ஒருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கொழுந்தட்டு கிராமத்தைச் சோ்ந்த மரியவியாகுலம் மனைவி லிட்டில் ரூத்ரதங்கம் (38). இவா், தாமரைமொழியைச் சோ்ந்த மு. இசக்கி என்பவரிடம் வட்டிக்கு ரூ40 ஆயிரம் கடன் வாங்கினாராம். இந்நிலையில், வட்டி பணம் தொடா்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டதால், மாவட்ட எஸ்.பி.யிடம் லிட்டில் ருத்ரதங்கம் புகாா் செய்தாா்.
இந்நிலையில், புதன்கிழமை இருவருக்கும் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, லிட்டில் ரூத்ரதங்கத்தை இசக்கி அவதூறாக பேசி, கொலை மிரட்டல் விடுத்தாராம்.
இதுகுறித்த புகாரின்பேரில், தட்டாா்மடம் காவல் காவல் ஆய்வாளா் ஹரிகிருஷ்ணன், கொலை மிரட்டல், பெண் வன்கொடுமை உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் இசக்கி மீது வழக்குப்பதிந்து அவரை தேடி வருகிறாா்.