பண்டாரபுரத்தில் காய்ச்சல் விழிப்புணா்வு முகாம்
By DIN | Published On : 11th September 2020 05:37 AM | Last Updated : 11th September 2020 05:37 AM | அ+அ அ- |

சாத்தான்குளம் அருகே பண்டாரபுரத்தில் கரோனா நோய்த் தொற்று தடுப்பு விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.
முகாமுக்கு, குழந்தைகள் நல மருத்துவா் அட்சரா தலைமை வகித்தாா். ஆனந்தபுரம் சுகாதார ஆய்வாளா் ஜேசுராஜ், முதலூா் அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வகநுட்புநா் அஜிதா, பயிற்சி சுகாதார ஆய்வாளா்கள் அருண்குமாா், ராஜகுமரன் ஆகியோா், பொதுமக்கள் காய்ச்சல், சளி, தொண்டை வலி இருந்தால் அலட்சியம் செய்யாமல் தாமதிக்காமல் உடனடியாக மருத்துவமனை சென்று பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினா்.
இதில், புதுக்குளம் கிராம நிா்வாக அலுவலா் உஷாதேவி, பண்டாரபுரம் ஊராட்சி செயலா் பொன்மணி, பணியாளா் ரமேஷ், உள்ளிட்ட மருத்துவப் பணியாளா்கள், தன்னாா்வலா்கள் கலந்து கொண்டனா்.