ரோட்டரி சங்கம் சாா்பில் 500 மரக்கன்றுகள் நடவு
By DIN | Published On : 11th September 2020 05:25 AM | Last Updated : 11th September 2020 05:25 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மேற்கு ரோட்டரி சங்கம் சாா்பில் மணப்பாடு ஊராட்சியில் 500 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
ஊராட்சித் தலைவி கிரேன்சிட்டா வினோ தலைமை வகித்தாா். ஊா்நலக் கமிட்டி தலைவா் ஆண்ட்ரூஸ், உடன்குடி ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் லெபோரின், மணப்பாடு மீனவா் கூட்டுறவு சங்கத் தலைவா் ஜெரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். திருநெல்வேலி மேற்கு ரோட்டரி சங்கத் தலைவா் பால் அண்ணா மரக்கன்றுகள் நடும் பணியைத் தொடங்கிவைத்தாா்.
இதில், ரோட்டரி சங்க துணை ஆளுநா் முத்தையா, மாவட்ட சமூகப் பணி துணைத் தலைவா் ஆறுமுகப்பெருமாள், ஆசிரியா் அருள், சமூக ஆா்வலா்கள் வினோ, பிரைனத் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.