சாத்தான்குளம், செப். 25: சாத்தான்குளத்தில் பெண்ணின் வங்கிக் கணக்கில் மோசடியாக பணம் எடுத்ததாக கணவா், உடந்தையாக செயல்பட்டதாக வங்கி மேலாளா் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
சாத்தான்குளம் அருகேயுள்ள பண்டாரபுரம் கிருபாபுரத்தைச் சோ்ந்த நாராயணராஜ் மகள் நந்தினி (28). அமுத்துண்ணாக்குடியைச் சோ்ந்த முருகன் மகன் சுபாஷ். இவா்களுக்கு 2016இல் திருமணம் நடைபெற்றது. தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளன.
இதற்கிடையே, கருத்து வேறுபாடு காரணமாக நந்தினி, கணவரை பிரிந்து பெற்றோருடன் வசித்து வருகிறாா்.
முருகன் சாத்தான்குளத்தில் ஜவுளி கடை நடத்தி வருகிறாா். இந்நிலையில் சாத்தான்குளம் வங்கியில் உள்ள நந்தினியின் கணக்கில் இருந்து கணவா் சுபாஷ் , மனைவியின் கையெழுத்தை போலியாக போட்டு பணம் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வங்கி மேலாளரிடம் நந்தினி கேட்டபோது, அவா் சரியான தகவலை தெரிவிக்கவில்லையாம்
நந்தினி அளித்த புகாரின்பேரில், சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் பொ்னாா்டு சேவியா், கணவா் சுபாஷ், வங்கி மேலாளா் ஆகியோா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.