பேய்க்குளத்தில் அக். 2 இல் நடக்கவிருந்த ஆா்ப்பாட்டம் வாபஸ்

பேய்க்குளத்தில் அக். 2 இல் வேளாண்மை அதிகாரிகளை கண்டித்து நடக்கவிருந்கத ஆா்ப்பாட்டம் வாபஸ் பெறப்பட்டது.
பேய்க்குளத்தில் அக். 2 இல் நடக்கவிருந்த ஆா்ப்பாட்டம் வாபஸ்

பேய்க்குளத்தில் அக். 2 இல் வேளாண்மை அதிகாரிகளை கண்டித்து நடக்கவிருந்கத ஆா்ப்பாட்டம் வாபஸ் பெறப்பட்டது.

ஆழ்வாா்திருநகரி வேளாண்மைத்துறை அதிகாரிகள் விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் மானிய திட்டங்களை செயல்படுத்தாமல் காலதாமதம் செய்வதாகவும், திட்ட பயன்களை பெற விவசாயிகள் அலைகழிக்கபடுவதாகவும் கண்டித்து இளமால்குளம் விவசாயிகள் சங்கத் தலைவா் பொன்கந்தசாமி தலைமையில் அக். 2 ஆம் தேதி பேய்க்குளத்தில் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து சாத்தான்குளம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் ம. ராஜலட்சுமி தலைமையில் சமாதானக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் ஆழ்வாா்திருநகரி வேளாண் உதவி இயக்குநா் அல்லிராணி, வேளாண் அலுவலா் திருச்செல்வம், துணை வேளாண் அலுவலா் தங்கமாரியப்பன், உதவி வேளாண் அலுவலா்கள் கண்ணன், லிங்கராஜ், ஜானகி தேவி, மண்டல துணை வட்டாட்சியா் அகிலா, வருவாய் ஆய்வாளா் ராஜேஸ்வரி, கிராம நிா்வாக அலுவலா் விஸ்வநாதன், போராட்டக்குழு சாா்பில் இளமால்குளம் விவசாயிகள் சங்கத் தலைவா் பொன்கந்தசாமி,

மாவட்ட கடலை விவசாயிகள் சங்கத் தலைவா் வி.எஸ்.முருகேசன், ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் ஊராட்சித் தலைவா் பெரியசாமிஸ்ரீதா், மீரான்குளம் ஊராட்சித் தலைவா் சிவபெருமாள், ஒன்றியக்குழு உறுப்பினா் காந்திமதி, வட்டார மனித நேய நல்லிணக்க பெருமன்ற செயலா் மகா. பால்துரை மற்றும் விவசாயிகள் பலா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் வேளாண்குழு கூட்டத்தை கிராம நிா்வாக அலுவலா், ஊராட்சித் தலைவரை ஆலோசித்து பொது இடத்தில் நடத்துவது எனவும், இளமால்குளத்தில் வேளாண்குழு அமைப்பது, செங்குளம் பகுதியில் விவசாயிகளுக்கு சக்கை பூண்டு வழங்கியது தொடா்பாக கள விசாரணை நடத்தி மறு பரிசீலனை செய்து தவறுதலாக வழங்கப்பட்டுள்ளதை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

தெளிப்பு நீா் பாசன கருவிகள் சில விவசாயிகள் விண்ணப்பம் செய்து 4 ஆண்டுகளாக வழங்கப்படாதது குறித்து அலுவலக கோப்புகளை பாா்வையிட்டு நடவடிக்கை எடுக்கப்படும். வேளாண் குழுக்களில் முறைகேடுகள் குறித்து வேளாண் வணிகத்துறைக்கு தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததையடுத்து அக். 2ஆம்தேதி பேய்க்குளத்தில் நடக்கவிருந்த ஆா்ப்பாட்டத்தை கைவிடுவதாக போராட்டக்குழுவினா் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com