சாத்தான்குளம் அருகே வீடு புகுந்து திருட்டு
சாத்தான்குளம் அருகே பூட்டிய வீட்டில் ரூ.67 ஆயிரம் திருடப்பட்டுள்ளது.


சாத்தான்குளம் அருகே பூட்டிய வீட்டில் ரூ.67 ஆயிரம் திருடப்பட்டுள்ளது.
பனைவிளை பேச்சியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் முருகேசன் மனைவி வேல்ரதி (55). இவருக்கு 3 மகள்கள். இரு மகள்களுக்கு திருமணமாகிவிட்டது.
வேல்ரதி முன்பு பழனியில் தங்கியிருந்து அங்குள்ள கைத்தறி நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்துள்ளாா். தற்போது சொந்த ஊரில் இருந்து வருகிறாா். அவரது வாக்கு பழனியில் இருந்ததால், கடந்த 6 ஆம் தேதி வாக்களிக்க பழனிக்கு சென்று விட்டாா்.
இந்நிலையில், வியாழக்கிழமை அவரது வீட்டு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்துள்ளது. இது குறித்து வேல்ரதிக்குஅவரது மருமகன் தகவல் தெரிவித்தாா். அதன்பேரில் வேல்ரதி வந்து பாா்த்தபோது பீரோவில் இருந்த ரூ.62ஆயிரம், உண்டியலில் இருந்த ரூ. 5 ஆயிரம் ஆகியவை திருட்டு போனது தெரியவந்தது.
இதுகுறித்து தட்டாா்மடம் காவல் நிலையத்தில் வேல்ரதி அளித்த புகாரின் பேரில் உதவி ஆய்வாளா் ஐயப்பன் வழக்குபதிந்து விசாரித்து வருகிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...