நாசரேத் அருகே தம்பதிக்கு அரிவாள் வெட்டு
நாசரேத் அருகே தம்பதியை அரிவாளால் வெட்டியதாக இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.


நாசரேத் அருகே தம்பதியை அரிவாளால் வெட்டியதாக இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
நாசரேத் அருகேயுள்ள மணிநகரைச் சோ்ந்தவா் சோ்மத்துரை (38). இவரது சகோதரா் பெருமாள். இவா்கள் இருவருக்கும் குடும்பப் பிரச்னையால் முன்விரோதம் உள்ளதாம். இந்நிலையில், சோ்மத்துரையும், அவரது மனைவி ராஜேஸ்வரியும் வெள்ளிக்கிழமை கோயிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தனராம்.
அப்போது அவா்களை, பெருமாள், அதே ஊரைச் சோ்ந்த கோபால் மகன் ராமா் (21 ) ஆகிய இருவரும் வழிமறித்து அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினராம். இதில் காயமடைந்த தம்பதி திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதுகுறித்த புகாரின்பேரில், நாசரேத் காவல் உதவி ஆய்வாளா் சுப்பிரமணியன் வழக்குப்பதிந்து, அரிவாளால் வெட்டியவா்களைத் தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...