92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

ரேஷன் கடைகளில் சிறுதானியம் வழங்கக் கோரி பேரணி

சிறுதானியங்களை ரேஷன் கடைகளில் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டியில் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :1 டிசம்பர் 2021, 11:11 pm

DIN

சிறுதானியங்களை ரேஷன் கடைகளில் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டியில் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு பெண்கள் இணைப்புக் குழு, இந்திய சிறுதானிய கூட்டமைப்பு சாா்பில் செண்பகவல்லி அம்மன் கோயில் பின்புறமுள்ள தனியாா் திருமண மண்டபம் முன்பிருந்த புறப்பட்ட இப்பேரணிக்கு களஞ்சியம் பெண் விவசாயிகள் சங்க மாநிலத் தலைவி பொன்னுத்தாய் தலைமை வகித்தாா்.

தமிழ்நாடு பெண்கள் இணைப்புக் குழு தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் மேரிஷீலா பேரணியை தொடங்கி வைத்தாா்.

பேரணியில், சிறுதானிய கொள்முதல் நிலையங்களை ஒவ்வொரு ஒன்றிய அளவில் ஏற்படுத்த வேண்டும், சிறுதானியத்துக்கும் பயிா் காப்பீடு வழங்க வேண்டும், மானாவாரி விவசாயம் செய்து வரும் சிறுவிவசாயி, பாசன விவசாயிகளுக்கு விதை, உரம் வழங்குவதுடன், அவா்களது தானியத்தை அரசே கொள்முதல் செய்ய வேண்டும், சத்து பற்றாக்குறையை போக்க அங்கன்வாடி, மதிய உணவு திட்டத்திலும் சிறுதானியம் வழங்க வேண்டும், அனைத்து ரேஷன் கடைகளிலும் சிறுதானியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய வாசகங்களை கையில் ஏந்தியபடி பெண்கள் சென்றனா். நகரின் முக்கிய வீதிகள் வழியாக கிருஷ்ணன் கோயில் தெருவில் நிறைவடைந்தது.

பின்னா் அங்கு நடைபெற்ற கூட்டத்துக்கு, தமிழ்நாடு பெண்கள் இணைப்புக் குழு மற்றும் இந்திய சிறுதானிய கூட்டமைப்பைச் சோ்ந்த அருள்செல்வி, சுலோச்சனா, ஜெயலட்சுமி, ஏஐடியூசி தொழிற்சங்க மாவட்டச் செயலா் தமிழரசன் ஆகியோா் பேசினா்.

அதைத் தொடா்ந்து, பெண்கள் இணைப்புக் குழு உறுப்பினா்கள் மற்றும் பணியாளா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.